குரங்கணி வனப்பகுதியில் நடந்த தீவிபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மதுரைக்கு வந்தார். ஆளுநரின் பாதுகாப்புப் பணிக்கு மோட்டர் சைக்கிளில் சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பா, ஆம்னி பஸ் மோதி பலியானார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.