விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரங்களில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதால், நடுவானில் விமானம் சென்றுகொண்டிருக்கும் போது இயக்க முடியாமல் போகிறது. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இன்று உள்நாட்டில் இயங்கும் 47 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக, இண்டிகோ நிறுவனம் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிட்டுள்ளது.