மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகக் கருதப்படும், சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் மாவோயிஸ்ட்கள் நடத்திய கண்ணி வெடிகுண்டு தாக்குதலில் 9 ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் 6 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.