மாலத்தீவு அருகே உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இந்நிலையில் பாம்பனில் புயல் எச்சரிக்கைக் கூண்டு எண் 3 ஏற்றப்பட்டு காற்றின் வேகம் அளவிடப்பட்டு வருகிறது. மீனவர்கள் இன்னும் 2 நாள்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.