சாத்தான்குளம் பகுதியில் தாமிரபரணி - கருமேனி - நம்பியாறு வெள்ள உபரி நீர்க்கால்வாய் பணி தொய்வு காரணமாக, நிலத்தடி நீர் இல்லாததால் ஆழ்துளைக் குழாய் கிணறுகளில் கடல்நீர் உட்புகுந்துள்ளதாக எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள். இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமியைச் சந்தித்து விவசாயிகள் முறையிட்டனர்.