நெல்லை, குமரி மாவட்டங்களில் கடந்த 2 நாள்களாகப் பரவலாக மழை பெய்துவருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்வதால் தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் குளிர்ச்சியாகக் காணப்பட்டன. குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத் தொடங்கியிருப்பதால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.