ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, `மத்திய அரசின் பணம் அல்லது மாநில அரசின் பணம் என எதுவும் இல்லை. எல்லாமே மக்கள் பணம்தான். தென் மாநிலங்களே மத்திய அரசுக்கு அதிக வருவாய் அளிக்கின்றன. ஆனால், மத்திய அரசோ, அந்தப் பணத்தை வடமாநிலங்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துகிறது’ என குற்றம்சாட்டினார்.