கோரிக்கைகளை வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கிலிருந்து மும்பைவரை 180 கி.மீ. தூரம் விவசாயிகள் நடத்திய பேரணி வெற்றியில் முடிந்தது. வெறுங்காலுடன் நடந்துவந்த விவசாயிகள் பலரின் கால்களில் தோல் பெயர்ந்திருந்தது. அவர்களுக்கு மும்பை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.