பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட காஷ்மீர் சிறுமி, ஜனவரி 17-ம் தேதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரை, ரஸனா கிராமத்தில் புதைக்க உறவினர்கள் முயற்சி செய்தனர். அதற்கு, அந்த ஊர் மக்கள் அனுமதிக்கவில்லை. அதனால், 8 கிலோமீட்டர் தூரம் சென்று சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.