சேலம் சுகவனேஸ்வரர் கோயில் பெண் யானை ராஜேஸ்வரி (42 வயது), பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த யானையைக் கருணைக் கொலை செய்வதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், யானைக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லையென்றால், கருணைக் கொலை செய்யலாம் என்று உத்தரவிட்டனர்.