ஹைதராபாத் சார்மினார் அருகில் உள்ள மெக்கா மஸ்ஜித்தில் 2007-ம் ஆண்டு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். ஐந்து பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. 11 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அனைவரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.