சென்னையில் உள்ள நடிகர் பார்த்திபனின் அலுவலகத்தில் லாக்கர் உடைக்கப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட விருதுகள், கேடயங்கள் ஆகியவை கொள்ளைபோயுள்ளன. இந்தச் சம்பவத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று நடிகர் பார்த்திபன் தரப்பில் போலீஸாரிடம் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. இதனால் கொள்ளைச் சம்பவத்தைப் போலீஸார் மூடிமறைத்து வருகின்றனர்.