சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த மீன்வியாபாரி ஆன சீனிவாசன் இன்று அதிகாலை வீட்டின் அருகில் வாக்கிங் சென்றார். அப்போது மர்மக் கும்பல் ஒன்று அவரை ஓட, ஓட அரிவாளால் வெட்டியது. இதில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சென்னையில் காலைவேளையில் நடந்த கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.