நெல்லை ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், மக்கள் நலப் பணிகளைச் செய்யாமல் மாவட்ட நிர்வாகம் புறக்கணிப்பதாக, தி.மு.க எம்.எல்.ஏ., பூங்கோதை ஆலடி அருணா குற்றம் சாட்டியுள்ளார். 10 நாள்கள் கெடு விதித்துள்ள பூங்கோதை, அதற்குள் பணிகளைச் செய்து முடிக்காவிட்டால், மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளார்.