காஷ்மீர் சிறுமி கொலை வழக்கை காஷ்மீரில் இருந்து சண்டிகருக்கு மாற்ற வேண்டும் என சிறுமியின் தந்தை சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், சிறுமியின் குடும்பத்துக்கும் அவரது வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.