திருவண்ணாமலை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பரந்துவிரிந்துள்ள பர்வத மலை காட்டுப்பகுதியில், நேற்று இரவு முதல் காட்டுத்தீ பரவி எரிந்து வருகிறது. கோடையால் உருவான இயற்கைத் தீயா? அல்லது சமூக விரோதிகள் உருவாக்கிய தீயா என்பது புரியாமல், வனத்துறையும் தீயணைப்புத்துறையும் ஒருங்கிணைந்து, தீயை அணைக்கப் போராடிவருகிறார்கள்.