கரூர், அரவக்குறிச்சியைச் சேர்ந்த ராசாம்பாள் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் ராசாம்பாள் அணிந்திருந்த ஆறரை பவுன் தாலிக்கொடியை அறுத்துச் சென்றனர். அதேபோல் மாவட்டத்தின் வேறு பகுதிகளிலும் பெண்களிடம் திருட்டு நடைபெற்றது. அதனால் பெண்கள் காவல்துறைக்கு எதிராகக் கொந்தளித்தனர்.