ஐரோப்பா அரசக் குடும்பத்தினர் கையில் 300 ஆண்டுகளாக இருந்த பழமையான நீலநிற வைரம் ஜெனீவாவில் ஏலம் விடப்பட்டது. இது கோல்கொண்டா வைர சுரங்கத்தில் இருந்து, 17-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியானது. தற்போது இது இந்திய மதிப்பில் 45 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.