விருதுநகர் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மிகவும் பிரசித்திபெற்ற சிவாலயமாகும். இங்கு, அமாவாசை நேரத்தில் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுவார்கள். கடந்த சில நாள்களாக இந்தப் பகுதியில் கனமழை பெய்ததால், இந்தக் கோயிலுக்குச் செல்வதற்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.