12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் தோல்வியடைந்ததால் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதே போன்று, தூத்துக்குடியில் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்த அரசுப் பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.