திருப்பூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் பெயிண்டிங் வேலையில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் இருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். சாமுண்டிபுரம் பகுதியில் பழனிசாமி என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் நடந்த பணியின்போது ராஜாமணி மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உயிரிழந்தனர்.