பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் விபத்துகளைத் தவிர்க்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் ரூ.13 கோடியில் தரைவழி மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், `உலகிலேயே அதிக அளவிலான சாலை வசதி இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் போக்குவரத்துக்காக 53 லட்சம் கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது’ என்றார்.