ஊட்டியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்ததையடுத்து, இன்று துவங்கவிருந்த கோடை விழா படகு போட்டிகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. மழையால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முக்கிய பகுதிகளில் மழைநீருடன், சாக்கடையும் தேங்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.