கோவில்பட்டி சமபந்தி நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் கலந்துகொண்டார். அப்போது, கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், போலி பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 5வது தூண் அமைப்பினர் சிவபெருமான் வேடமணிந்து ஆட்சியரை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.