தமிழகத்தில் உள்ள அகதி முகாமில் தங்கியிருந்து, கள்ளத்தனமாக இலங்கை சென்ற இரு குழந்தைகள் உள்ளிட்ட 4 பேரை அந்நாட்டுக் கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை இலங்கைக்கு அழைத்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.