கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா நாளை காலை 9.30 மணிக்குப் பதவியேற்க இருப்பதாக பா.ஜ.க  எம்.எல்.ஏ சுரேஷ்குமார் மற்றும் கர்நாடக பா.ஜ.க-வின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்பட்டது. பின்னர், அந்தப் பதிவுகள் டெலிட் செய்யப்பட்டன. ஆட்சியமைக்கத் தேவையான 112 எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-விடம் இல்லாதநிலையில், இது சர்ச்சையாகியுள்ளது.