கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்க ஆளுநர் வாஜுபாய் வாலா அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பின்பு ஆளுநர் இந்த முடிவை அறிவித்துள்ளார். 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அழைப்பைத் தொடர்ந்து நாளை எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்கவுள்ளார்.