போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று காலை ஜம்மு-காஷ்மீர் சம்பா செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ஓர் அசிஸ்டன்ட் கமாண்டன்ட் உட்பட நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.