தென்மேற்குப் பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கோவை, நீலகிரி, நெல்லை, குமரி, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.