தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 -வது யூனிட்டில்  கொதிகலனில் ஏற்பட்ட  பழுதால்  210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே  3 -வது யூனிட் பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால்  மொத்தம் 420 மெகாவாட்  மின் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது. பழுதை சரி செய்யும் பணி நடைபெறுகிறது!