கார்த்தி சிதம்பரம் மீது டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் சட்ட விரோத பணபரிவர்தனை பிரிவின் கீழ் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை, வரும் ஜூலை மாதம் 4 -ம் தேதி தொடங்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.