குற்றாலம் அருவியில் இரண்டு தினங்களுக்கு முன்பு வரை அதிக தண்ணீர் கொட்டியதால், குளிக்கத்  தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த இரண்டு தினங்களாக மழையின் தாக்கம் குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.