காலா படத்துக்கு திரையரங்கில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரத்தில் பதில் அளிக்கவேண்டும்' என்று உத்தரவிட்டனர்.