தென்மேற்குப் பருவமழை கேரளா மற்றும் கர்நாடகாவில் வலுப்பெற்று வரும் நிலையில் தமிழக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதே போல் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வெப்பச்சலனத்தால் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. இந்த நிலை அடுத்த இரண்டு தினங்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.