புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது `கிரிலோஸ்கர் பிரதர்ஸ் லிமிட்' நிறுவனம். இது அதிநவீன தொழில்நுட்பம் மூலம் தண்ணீரை வேகமாக வெளியேற்றும் மோட்டார்கள், தண்ணீரை வேகமாக இறைக்கும் மோட்டார்களைத் தயாரிப்பதில் இந்திய அளவில் முன்னணி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தாய்லாந்து சிறுவர்களை மீட்பதற்கு உதவியுள்ளது.