தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கு இன்று மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், ``ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸார் என்ன வகையான துப்பாக்கிகள் பயன்படுத்தினர். துப்பாக்கிச்சூடு நடந்த அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் எங்கு இருந்தார்" எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.