நெல்லையில் பேசிய பாஜக தேசிய பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவ், `2019-ல் நடைபெற உள்ள நடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி பாஜக வெற்றி பெறும். பாஜகவால் மட்டுமே ஊழலற்ற ஆட்சியைத் தரமுடியும். தமிழகத்தைப் பொறுத்தவரை கூட்டணியுடன் தேர்தலைச் சந்திப்போம், கூட்டணி குறித்து அடுத்த 3 மாதகாலத்தில் முடிவு செய்வோம்’’ எனத் தெரிவித்தார்.