உங்களால் பாதுகாக்க முடியவில்லை என்றால் தாஜ்மஹாலை  மூடி விடுங்கள் அல்லது இடித்து விடுங்கள். உங்கள் அக்கறையின்மை காரணமாக நாட்டிற்கு ஏற்படும் பெரிய இழப்பை நீங்கள் உணரவில்லையா?. தாஜ்மஹால் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என மத்திய மற்றும் உத்தரபிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.