தேனி மாவட்டம் போடியில் காவலர்கள் ஆனந்த், ஜெயராமன் இருவரும் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவருடன் காவலர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. பிரபுவை, இரு காவலர்களும் சரமாரியாகத் தாக்கினர். அதில், ஒரு காவலர் மது அருந்தியிருந்தார். அந்த வீடியோ வைரலாகிவருகிறது.