வேலூர், ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண் சுகுணா. அவருக்கும், சுரேந்திரன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சுரேந்திரன் மீது சுகுணா நேற்று காவல்நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தார். காவல்நிலையத்திலிருந்து வெளியே வந்த அவரை, ஒருவர் வெட்டிக் கொலை செய்தார். இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.