உலகக் கோப்பை கால்பந்து இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நேற்று இங்கிலாந்தும் குரோஷியா அணிகளும் மோதின. அந்த ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் ஒரு கோல் அடித்து குரோஷியா முதல்முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.