ஆதார் எண் இல்லாமல் ஆன்லைனில் வருமான வரித் தாக்கல் செய்யலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு வந்து இரண்டு வாரம் கழித்து தற்போது, ஆதார் எண் இல்லாமல் ஆன்லைனில் வருமான வரித்தாக்கல் செய்யும் வசதி வருமான வரி இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.