தெலங்கானா, ஹைதராபாத் நகரில், கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்த தன் கணவனைக் கொலை செய்ய பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்திய மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர். போலீஸார் நடத்திய விசாரணையில், கொலை செய்துவிட்டு நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. கொலைக்குப் பயன்படுத்திய பொருள்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.