72-வது சுதந்திர தினம் நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப் பட உள்ளது. இதனால், டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் போலீஸ் பாதுகாப்பு வலையத்துக்குள் கொண்டுவரப்பட உள்ளன. இதேபோல், புதுச்சேரியிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனைக்கு பிறகே பயணிகள் ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.