கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து வருவதால் மொத்தமுள்ள 40 அணைகளில் 24 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இடுக்கி மாவட்டத்தில் 11 பேரும் மலப்புரத்தில் 6 பேரும் கோழிக்கோட்டில் இருவரும் வயநாட்டில் ஒருவரும் மழைக்குப் பலியாகியுள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.