நீலகிரியில், யானைகள் வழித்தடத்தில் முறையான அனுமதியின்றி ஹோட்டல் மற்றும் காட்டேஜ்கள் கட்டப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கட்டடங்களுக்கு சீல் வைப்பதற்கான நோட்டீஸ் வழங்கும் பணியை அதிகாரிகள் இன்று துவங்கினர்.  'இந்த உத்தரவு குடியிருப்புகளுக்கு பொருந்தாது, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை' என ஆட்சியர் அறிவித்துள்ளார்.