தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து, ஒரே சரக்குப் பெட்டகத்தில் 6 பந்தயக் குதிரைகள் நிறுத்தப்பட்டு, சரக்குக் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சென்னை, பெங்களூரு, புனே ஆகிய பகுதிகளிலிருந்து குதிரைகள் கொண்டுவரப்பட்டன. கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் உடல் பரிசோதனை செய்யதபின் அனுப்பிவைக்கப்பட்டது.