தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி உயிரிழந்த பிறகு, தி.மு.க-வின் புதிய தலைவராக ஸ்டாலினும் பொருளாளராக துரைமுருகனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னதாக, துரைமுருகன் வகித்து வந்த முதன்மைச் செயலாளர் பதவி காலியானதைத் தொடர்ந்து தற்போது அந்தப் பொறுப்பு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.