மறுமணம் செய்வதால் பென்ஷன் என்கிற பொருளாதார பாதுகாப்பு கிடைக்காமல் போய்விடலாம் என்ற பயத்திலேயே சில பெண்கள் மறுமணம் செய்துகொள்வதில்லை. ஆனால், மறுமணம் செய்துகொண்டாலும் ஃபேமிலி பென்ஷன் வருவதில் எந்தத் தடையும் இருக்காது என்று ரேணு குப்தா என்பவர் தொடுத்த வழக்கின் மீதான விசாரணையில் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் கூறியுள்ளது.