வரலாறு காணாத மழை கேரளாவைப் புரட்டிப்போட்டது வெள்ளம். பம்பை ஆற்றில் 30 அடிக்கும் மேலே வெள்ளம் பாய்ந்ததால் யாரும் சபரிமலைக்கு வர வேண்டாம் என கோயில் நிர்வாகம் அறிவித்தது. வெள்ளத்துக்குப் பிறகு, 'சபரிமலை ஐயப்பன் கோயில், வரும் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை திறக்கப்படும்' என்று தேவஸ்தான போர்டு நிர்வாகம் அறிவித்திருக்கிறது.